/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி மேம்பாலம் அருகே புறக்காவல் நிலையம் வேண்டும் நகராட்சி கவுன்சிலர் ராஜவேல் கோரிக்கை

ADDED : ஆக 16, 2024 11:23 PM

திட்டக்குடி: மாவட்ட எல்லையாக உள்ள திட்டக்குடி மேம்பாலம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அ.தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் ராஜவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திட்டக்குடி நகராட்சியில் கடந்த 7 மாதங்களாக நகர மன்ற கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளின் அடிப்படை பிரச்னைகளுக்கு கூட தீர்வு காண முடியாமல் அவதிப்படுகின்றனர்.
வரிவிதிப்பில் 'ஏ' பிரிவில் உள்ள 20வது வார்டில், வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்.
வார்டில் உள்ள கீரைக்கார வீதி, தெற்குதெரு பகுதியில் கன மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அப்பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் அமைத்துத்தர வேண்டும். திட்டக்குடி தரைப்பாலம் அருகே மயானத்திற்கு செல்லும் வழியில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும்.
அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள், பள்ளி, கல்லுாரி பஸ்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், வாகன விபத்துகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட எல்லையாக உள்ள இப்பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில், 24 மணிநேரமும் செயல்படக்கூடிய புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராஜவேல் கூறினார்.