/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்துக்குமார சாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
முத்துக்குமார சாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : மே 04, 2024 06:49 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் நேற்று நடந்த, வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சாமி கோவில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பரங்கிப்பேட்டையில் புகழ்பெற்ற முத்துக்குமாரசாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.அதையொட்டி, கடந்த மாதம் 26ம் தேதி தேவதா அனுக்ஞை கோ பூஜை நடந்தது. 30ம் தேதி முதல் கால யாக பூஜையும், 1ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், 2ம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக பூஜை நடந்தது.
கும்பாபிஷேகத்தினமான நேற்று ஆறாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9;45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12;00 மணிக்கு மகா அபிஷேகமும், மதியம் 1:00 மகா தீபாதரனையும் நடந்தது.
கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத முத்துகுமார சாமிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 9;30 பஞ்ச மூர்த்தி திருவீதியுலா காட்சியும் நடந்தது. ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.