/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
/
முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 28, 2024 04:06 AM
விருத்தாசலம், ஏப். 28-
விருத்தாசலம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகத்தில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் காந்தி நகர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது. அதனையொட்டி, கடந்த 25ம் தேதி காலை 10:00 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரஹ ேஹாமம், தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் 26ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு நாடிசந்தனம், 10:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, 10:10 மணிக்கு விநாயகர், முருகன், முத்துமாரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

