ADDED : ஆக 08, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி துறை மற்றும் அஞ்சலக துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்பட்டது.
சி.என்.பாளையம் குமரவேல் கைத்தறி நெசவாளர் சங்கத்தில் நடந்த முகாமிற்கு கடலூர் அஞ்சலக உட்கோட்ட ஆய்வாளர் பழனிமுத்து தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மங்களம் வேல்முருகன், வி.ஏ.ஓ.,ஜெயந்தி, கூட்டுறவு சங்க மேலாளர் மோகன் முன்னிலை வகித்தனர்.
நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் கைத்தறி நெசவாளர்கள் தங்களது ஆதார் கார்டில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அஞ்சலக மேற்பார்வையாளர் தாஜூதின், முருகன், கிருஷ்ணமூர்த்தி, நெசவாளர் சங்க முன்னாள் இயக்குனர்கள் பஞ்சாட்சரம், நடராஜன்,அஞ்சலக பணியாளர்கள்,கூட்டுறவுத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.