/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.சி.சி., மாணவர்கள் பாய்மர படகு சாக ச பயணம்
/
என்.சி.சி., மாணவர்கள் பாய்மர படகு சாக ச பயணம்
ADDED : ஜூன் 09, 2024 03:11 AM

கடலுார் : கடலுார் துறைமுகத்தில் என்.சி.சி., மாணவர்களின் பாய்மர படகு சாகச கடல் பயணத்தை எஸ்.பி., ராஜாராம் துவக்கி வைத்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதம மந்திரி கோப்பைக்கான பாய்மர படகு வீரதீர சாகச கடல் பயணம் 'சமுத்திர சக்தி' என்ற பெயரில் புதுச்சேரி முதல், காரைக்கால் வரை சென்று திரும்பும் வகையில், 302 கி.மீ., துாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என்.சி.சி., (கடற்படை பிரிவு) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயணம் புதுச்சேரியில் நேற்று முன்தினம் துவங்கி கடலுார் துறைமுகம் வந்தடைந்தது. இங்கு, படகு பயணத்தை எஸ்.பி.,ராஜாராம் துவக்கி வைத்தார். புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு என்.சி.சி., கடற்படை பிரிவை சேர்ந்த 60 மாணவ, மாணவியர் பயணம் மேற்கொண்டுள்ளனர். டி.எஸ்.பி., பிரபு, என்.சி.சி., கட்டளை அதிகாரி அருள் நாட், லெப்டினன்ட் கமாண்டர் லோகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இப்பயணம் பரங்கிப்பேட்டை, பூம்புகார், காரைக்கால் வரை சென்று மீண்டும் அதே வழியாக புதுச்சேரிக்கு வரும் 16ம் தேதி வந்தடைகிறது.