நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி கிராம மக்கள், மாணவர்கள் விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இங்குள்ள பயணியர் நிழற்குடை சாலை விரிவாக்கத்தின்போது கடந்தாண்டு அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை புதிதாக நிழற்குடை கட்டவில்லை.
தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பெண்கள், முதியோர்கள் நீண்டநேரம் வெயிலில் நின்று பஸ் ஏறும் அவலம் உள்ளது.
எனவே, நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.