/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய தேர் பவனி விவகாரம் பேச்சுவார்த்தை தோல்வி
/
புதிய தேர் பவனி விவகாரம் பேச்சுவார்த்தை தோல்வி
ADDED : பிப் 10, 2025 05:34 AM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே புதிய தேர் பவனி விழாவிற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ புதுக்குப்பம் புனித லுார்து அன்னை ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர் பவனி நடக்கிறது. அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் மற்றொரு இடத்தில் புதிய தேர் பவனி விழா நடத்த முடிவு செய்தனர்.
இதற்கு நீண்ட காலமாக தேர் பவனி விழா நடத்துவோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பிரச்னை ஏற்படும் என்பதால் புதிய தேர் பவனி விழா நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர்.
இது தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் சேகர் தலைமையில் நடந்தது.
இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேதுபதி, சப் இன்ஸ்பெக்டர் சந்திரா, புதுக்குப்பம் பங்குத் தந்தை யூஜின்டோனி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், நேற்று டி.எஸ்.பி. விஜிகுமார் புதுக்குப்பத்தில் ஆய்வு செய்தார்.
இன்று மீண்டும் இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்னையால் புதுக்குப்பம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

