/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை முற்றுகை
/
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை முற்றுகை
ADDED : ஆக 15, 2024 05:18 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சரவணபுரம், வைடிபாக்கம் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மக்கள் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலைக்கு முன் கூடி ஆலை வாயிலை முற்றுகையிட்டனர்.
நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலையில் புதியதாக அமைத்த புகைபோக்கி குறைவான உயரத்தில் உள்ளதால் அதிலிருந்து வெளியேறும் புகையால் மக்கள் பாதிக்கபடுகிறார்கள்.
மேலும் கரித்துகள்கள் பறந்து வருவதால் கண்கள் பாதிக்கிறது.
ஆலையால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது என, பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணியளவில், ஆலை முன்பு நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி, முற்றுகையிட்டனர்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஆலை அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தை தொடர்ந்து, 11:50க்கு முற்றுகை கைவிடப்பட்டது.