ADDED : செப் 08, 2024 06:00 AM
விருத்தாசலம்: வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் மேட்டுக்காலனியை சேர்ந்தவர் வீரராகவன் மகன் விஜயராகவன், 34;சொந்தமாக கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி இரவு 8:00 மணிக்கு முல்லாதோட்டம் பகுதியில் உள்ள கடைக்கு பைக்கில் சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு கிளம்பினார்.
அப்போது, முல்லாதோட்டம் பிரவின், ராமச்சந்திரன்பேட்டை திலீப் (எ) லட்டு, முல்லாதோட்டம் ஆகாஷ், வசந்த் ஆகியோர் விஜயராகவன் பைக்கை எடுக்க விடாமல் தடுத்து, ஜாதியை சொல்லி ஆபாசமாக திட்டி, இரும்பு பைப், கட்டையால் தாக்கினர். படுகாயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
டி.எஸ்.பி., கிரியா சக்தி வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு பதிந்து, பிரவின் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறார்.