ADDED : ஆக 23, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அருகே குழந்தையை கண்டித்ததை தட்டிகேட்ட தகராறில் மூவரை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த மணக்குப்பம் பாலு மகன் அசோக் 38; இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த குமாரசாமி. இவர்து தனது குழந்தையை கண்டித்துள்ளார். இதனை, அசோக் தட்டிகேட்டார்.
இதனால் தகராறு ஏற்பட்டு, குமாரசாமி மற்றும் அவரது மனைவி சந்தியா இருவரும் சேர்ந்து அசோக்கை திட்டி, தாக்கியுள்ளனர். தடுக்க வந்த அசோக் சகோதரர் பாஸ்கர், அவரது மனைவி ஆனந்தியையும் தாக்கினர். காயமடைந்த மூவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அசோக் கொடுத்த புகாரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

