ADDED : மார் 26, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அருகே அனுமதியின்றி கிராவல் கடத்தி வந்த டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலுார், முதுநகர் அடுத்த சான்றோர்பாளையத்தில் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக கிராவல் ஏற்றி வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். டிரைவர் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பியோடினார்.
உடன், அதிகாரிகள் டிராக்டரை பறிமுதல் செய்து, கடலுார், முதுநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர்.
விசாரணையில், அனுமதியின்றி கிராவல் கடத்தி வந்தது தெரிந்தது. தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

