/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டிக்கு புதிய பஸ் இயக்கம் எம்.எல்.ஏ., - மேயர் துவக்கி வைப்பு
/
பண்ருட்டிக்கு புதிய பஸ் இயக்கம் எம்.எல்.ஏ., - மேயர் துவக்கி வைப்பு
பண்ருட்டிக்கு புதிய பஸ் இயக்கம் எம்.எல்.ஏ., - மேயர் துவக்கி வைப்பு
பண்ருட்டிக்கு புதிய பஸ் இயக்கம் எம்.எல்.ஏ., - மேயர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 16, 2024 11:24 PM

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் இருந்து, பாலுார் வழியாக பண்ருட்டிக்கு மகளிர் கட்டணமில்லா பஸ் துவக்க விழா நடந்தது.
விழாவில், பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் புதிய பஸ்சை துவக்கி வைத்தனர்.
துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் அனு முன்னிலை வகித்தனர்.
அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் ராகவன் வரவேற்றார்.
இந்த பஸ் தினமும் கடலுாரில் இருந்து பாலுார் வழியாக பண்ருட்டிக்கு செல்லும்.
நிகழ்ச்சியில், தொ.மு.ச., தலைவர் பழனிவேல், ஐ.என்.டி.யூ.சி., சாமிநாதன் மற்றும் துணை மேலாளர்கள் சிவராமன், பரிமளம், கிளை மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அருண், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.