/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுகிரகா டவுன்ஷிப்பில் புது வழி குடியிருப்போர் எதிர்ப்பு
/
அனுகிரகா டவுன்ஷிப்பில் புது வழி குடியிருப்போர் எதிர்ப்பு
அனுகிரகா டவுன்ஷிப்பில் புது வழி குடியிருப்போர் எதிர்ப்பு
அனுகிரகா டவுன்ஷிப்பில் புது வழி குடியிருப்போர் எதிர்ப்பு
ADDED : செப் 02, 2024 01:04 AM
கடலுார் : கடலுார் பெரிய காட்டுப்பாளயம் அனுகிரகா டவுன்ஷிப்பிற்குள் புதியதாக வழி ஏற்படுத்துவதற்கு குடியிருப்போர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடலுார் பெரிய காட்டுப்பாளையம் அனுகிரகா டவுன்ஷிப் உள்ளது. இதற்குள் போலீஸ் உயரதிகாரிகள், நீதிபதிகள், வருவாய்த்துறையினர், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் என பல தரப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
குடியிருப்பு முழுதும் சுற்றுச்சுவர் போடப்பட்டு 24 மணி நேரமும் செக்யூரிட்டி கண்காணிப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் பக்கத்து குடியிருப்பில் இருந்து அனுகிரகா டவுன்ஷிப்புக்குள் செல்ல வழி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே சிலர் சுற்றுச்சுவர் உடைத்து வழி ஏற்படுத்தியுள்ளதாக அக்கம்பக்கத்தில் குடியிருப்போர் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கலெக்டர், எஸ்.பி.,யை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.