/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை
/
நெய்வேலி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை
ADDED : ஆக 05, 2024 12:15 AM
மந்தாரக்குப்பம்: நெய்வேலி ரயில் நிலையத்தில் குடிநீர், மின் விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெய்வேலி ரயில் நிலையம் வழியாக தினசரி கடலுார் - திருச்சி, கடலுார் - சேலம், காரைக்கால் - பெங்களூரு ஆகிய ரயில்கள் தினசரி இவ்வழியாக இருமுறை சென்று வருகின்றன.
ஏராளமான பயணிகள் நெய்வேலி ரயில் நிலையத்திற்கு தினசரி வந்து செல்கின்றனர்.
ரயில் நிலையத்தில் குடிநீர், மின்விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும் திருச்சி - கடலுார் ரயில் தினசரி இரவு 7:30 மணி மற்றும் சேலம் - கடலுார் ரயில் தினசரி இரவு 9:30 மணிக்குநெய்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் கடலுாருக்கு புறப்பட்டு செல்கிறது.
இரவு நேரத்தில் முதியவர்கள், பெண்கள் மற்றும் பயணிகள் நெய்வேலி ரயில் நிலையத்தை விட்டு வெளியே வரும் போது வழிப்பாதையில் மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பயணிகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே மின்விளக்கு, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அமைக்கரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.