/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
/
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : செப் 02, 2024 01:08 AM

மந்தாரக்குப்பம் : என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 18 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 7:00 மணியளவில் என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன், சாலையில் அமர்ந்து 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த என்.எல்.சி., அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து என்.எல்.சி., உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நாளை காலை 11:00 மணியளவில் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் காலை 10:15 மணியளவில் கலைந்து சென்றனர்.