/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சுரங்க கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி பலி
/
என்.எல்.சி., சுரங்க கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி பலி
என்.எல்.சி., சுரங்க கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி பலி
என்.எல்.சி., சுரங்க கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி பலி
ADDED : ஜூலை 08, 2024 05:19 PM

மந்தாரக்குப்பம்:
என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில், கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டம், மந்தாரக்குப்பம் அடுத்த ஊமங்கலம் தெற்குவெள்ளுர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், 50. என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 9:30 மணியளவில் இரண்டாம் சுரங்கம் டாப் பெஞ்ச் பகுதியில் நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட் செல்லும் பகுதியில் பணியில் இருந்தார். அப்போது, எதிர்பாரதவிதமாக கன்வேயர் பெல்ட்டில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
அவரது உடலை மீட்டு என்.எல்.சி., ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த அவரது உறவினர்கள் என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு காலை 10:30 மணியளவில் திரண்டனர். ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த என்.எல்.சி., அதிகாரிகள் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அன்பழகன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண தொகை மற்றும் உரிய வேலை வழங்கப்படும் என உத்திரவாதம் அளித்தனர். அதை தொடர்ந்து காலை 11:30 மணியவில், உறவினர்கள் கலைந்து சென்றனர். அதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக அன்பழகன் உடல் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவத்தால், என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது