/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் முடியும் வரை பாட்டில் பெட்ரோலுக்கு 'நோ'
/
தேர்தல் முடியும் வரை பாட்டில் பெட்ரோலுக்கு 'நோ'
ADDED : ஏப் 07, 2024 04:54 AM
சிதம்பரம், : கடலுார் மாவட்டத்தில் தேர்தல் முடியும் வரை பாட்டில் பெட்ரோல் வழங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 19ம் தேதி லோக்சாபா தேர்தல் நடைபெற உள்ளது. குறுகிய நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கட்சித் தலைவர்களின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், வேன் பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி, தேர்தல் முடியும் வரை பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம், பெட்ரோல் பங்க் உரியைாளர்களுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது.
தேவையில்லாமல் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

