/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடக்கு மாவட்ட தே.மு.தி.க., வெள்ளி விழா பொதுக்கூட்டம்
/
வடக்கு மாவட்ட தே.மு.தி.க., வெள்ளி விழா பொதுக்கூட்டம்
வடக்கு மாவட்ட தே.மு.தி.க., வெள்ளி விழா பொதுக்கூட்டம்
வடக்கு மாவட்ட தே.மு.தி.க., வெள்ளி விழா பொதுக்கூட்டம்
ADDED : பிப் 27, 2025 06:45 AM

கடலுார்; கடலுார் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் கட்சியின் வெள்ளி விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கடலுார் புதுப்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார்.
அவைத் தலைவர் பக்கிரி முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார்.
தலைமை கழக பேச்சாளர் தென்னவன், மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், பொருளாளர் ராஜ் ஆகியோர் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி, 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, கட்சி கொள்கைகளை விளக்கி பேசினர்.
அப்போது, மாவட்ட துணை செயலாளர்கள் சித்தநாதன், பாலமுருகன், வேல்முருகன், ஒன்றிய செயலாளர் கலாநிதி, பொதுக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நகர துணை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.