/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நுாறு நாள் திட்ட நிதியில் நுாதன கொள்ளை
/
நுாறு நாள் திட்ட நிதியில் நுாதன கொள்ளை
ADDED : செப் 18, 2024 05:57 AM
மாவட்ட எல்லையில் உள்ள ஒரு ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள் மற்றும் 30 துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, ஊரக வளர்ச்சிக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி வாய்ப்பு திட்டத்தில், தார்சாலை, குளம் மற்றும் ஏரிகளில் தடுப்பணைகள் கட்டுமான பணி, துார் வாருதல், அரசு பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு உள்ளிட்ட திட்டப்பணிகள் நடக்கிறது.
இதில், ஊராட்சி தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களின் குடும்பங்களுக்கு, அட்டைகள் வழங்கி, வேலைக்கு வராமல் வேலைக்கு வந்ததாக கணக்கு காட்டுகின்றனர்.
இதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கில் பணம் வந்தவுடன், மூன்றில் இரண்டு பங்கு பணத்தை ஊராட்சி தலைவரும், ஒரு பங்கு பயனாளியும் பணத்தை பிரித்து கொள்கின்றனர். இதனால், வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் மக்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
இதன் மூலம் ஊராட்சி தோறும் லட்சக்கணக்கில் அரசு பணத்தை பொய் கணக்கு காட்டி நுாதன முறையில் ஊராட்சி நிர்வாகத்தினர் கொள்ளை அடிக்கின்றனர்.

