/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் அதிகாரிகள் அடம்
/
ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் அதிகாரிகள் அடம்
ADDED : செப் 18, 2024 05:59 AM
பண்ருட்டி தாலுகாவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 28 ஏரிகள் உள்ளது. ஆனால், பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு அலுவலர்கள் ஏரிகளை பராமரிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மேலும், பண்ருட்டி நகராட்சி எல்லையில் மிகப்பெரிய ஏரியான செட்டிப்பட்டறை ஏரி உள்ளது. இந்த ஏரி, பண்ருட்டி நகரம் எல்.என்.புரம், மாளிகைமேடு, கணிசப்பாக்கம் எல்லைகளை உள்ளடக்கியது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தமிழகம் முழுவதும் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், பண்ருட்டி தாலுகாவில் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையில் இறங்கவில்லை.
பண்ருட்டி செட்டிப்பட்டறை ஏரியை, ஏரிபாசன விவசாயிகள் சங்கத்துடன் சேர்ந்து புனரமைப்பு செய்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிகாரிகள் கணக்கு காண்பித்தனர்.
ஆனால் இந்த ஏரியில் இந்த ஏரி 60 சதவீதம் ஆக்கிரமிப்புகளுடன் வீடு, நிலங்களில் பயிர்கள் உள்ளதால் மழைகாலம் துவங்கும் முன் நீரை சேமிக்க ஆக்கிரமிப்புகள் அகற்றிட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.