/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடமைக்கு காலத்தை ஓட்டும் அதிகாரிகள்
/
கடமைக்கு காலத்தை ஓட்டும் அதிகாரிகள்
ADDED : ஜூலை 10, 2024 04:39 AM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி தாலுகாவில், கடந்த லோக்சபா தேர்தலின் போது, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறையில் பல அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அந்த வகையில், வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், போலீஸ் அதிகாரி ஒருவர் என இருவரும், வெளியூரில் இருந்து இங்கு மாற்றப்பட்டனர். பணிக்கு சேர்ந்த நாள் முதல் தங்கள் பணிகளில் அக்கறை காட்டவில்லை.
எப்போ தேர்தல் முடியும், மறுபடியும் டிரான்ஸ்பரில் விரும்பிய பணியிடத்திற்கு செல்லலாம் என்ற நினைப்பிலே காலம் கடத்தி வந்தனர். தற்போது தேர்தல் முடிந்து, முடிவுகளும் வெளியான நிலையில், விக்கிரவாண்டி இடைதேர்தல் வந்ததால், காவல்துறையில் அதிகாரிகள் டிரான்ஸ்பர் பெற முடியாத நிலை உள்ளது. வருவாய்துறையில், லோக்சபா தேர்தல் செலவினங்களுக்கான தொகை வந்து சேராததால் டிரான்ஸ்பர் பெற விரும்பாமல் உள்ளனர். விருப்பமில்லாத பணியிடத்தில் வழக்கமான பணிகளை கூட செய்யாமல், முக்கிய பொறுப்பிலுள்ள அதிகாரிகள் கடமைக்கு வந்து செல்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.