/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு விருதையில் அதிகாரிகள் அதிரடி
/
காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு விருதையில் அதிகாரிகள் அதிரடி
காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு விருதையில் அதிகாரிகள் அதிரடி
காலாவதி குளிர்பானங்கள் அழிப்பு விருதையில் அதிகாரிகள் அதிரடி
ADDED : ஆக 15, 2024 04:37 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதி குளிர்பானங்களை உணவு பாதகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் மலிவு விலை குளிர்பானம் குடித்து இறந்தார். அதனையொட்டி, மாநிலம் முழுவதும் குளிர்பான கிடங்குகள் மற்றும் கடைகளை ஆய்வு செய்திட உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், விருத்தாசலத்தில் காட்டுக்கூடலுார் சாலை, கடலுார் ரோடு மற்றும் புதுக்கூரைப்பேட்டை பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள் மற்றும் குடோன்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் நல்லதம்பி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
ஆய்வில் ஒரு கடையில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான 8 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.