/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எலி பேஸ்ட் சாப்பிட்டு முதியவர் தற்கொலை
/
எலி பேஸ்ட் சாப்பிட்டு முதியவர் தற்கொலை
ADDED : ஆக 31, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தீராத வயிற்று வலியால் எலி பேஸ்ட் சாப்பிட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், புது இளவரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 72. இவர் கடந்த 2 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 28ம் தேதி வலி அதிகமானதால், மனமுடைந்த கோவிந்தசாமி, எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.