நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; அடையாளம் தெரியாத முதியவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
விருத்தாசலம், கடலுார் சாலையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் எதிரே நேற்று அதிகாலை, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சென்று விசாரித்தபோது, அதிகாலை நேரத்தில் அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்திருக்கலாம் என தெரிந்தது.
இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.
பூதாமூர் வி.ஏ.ஓ., புஷ்பலதா புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.