/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்துக்குள்ளான அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: 29 பேர் காயம் கடலுார் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
விபத்துக்குள்ளான அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: 29 பேர் காயம் கடலுார் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
விபத்துக்குள்ளான அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: 29 பேர் காயம் கடலுார் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
விபத்துக்குள்ளான அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: 29 பேர் காயம் கடலுார் அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 13, 2024 04:47 AM

கடலுார்: கடலுார் அருகே நள்ளிரவில், சாலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான அரசு பஸ் மீது, ஆம்னி மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் உட்பட 29 பேர் படுகாயமடைந்தனர்.
கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக பஸ், சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வழியாக காரைக்கால் நோக்கி சென்றது. திருவாரூர் மாவட்டம் பூங்காவூரை சேர்ந்த தனசேகரன், 47, பஸ்சை ஓட்டினார்.
நாகை மாவட்டம் கோடிமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார், 40; கண்டக்டர் பணியில் இருந்தார்.
நள்ளிரவு 2:00 மணிக்கு கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடி, கரிக்கன் நகர், மலட்டாறு பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் மோதி நின்றது.
அப்போது, அரசு பஸ்சை பின்தொடர்ந்து வந்த வி.பி.எம். என்ற ஆம்னி பஸ், விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பஸ் மீது வேகமாக மோதியது. விபத்தில் சிக்கிய பயணிகள் அலறினர்.
தகவலின்பேரில், ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் சுரேஷ்குமார், டிரைவர் தனசேகரன், புவனகிரி தர்மராஜ், 35; கத்திரிகுளம் வைரசெல்வம், 28; மேலமூங்கிலடி தணிகாசலம், 52; தரங்கம்பாடி பாலகுமார், 37; சென்னை ஆதம்பாக்கம் சித்திவிநாயகம், 57; சித்ரா, 42; சீர்காழி உதயக்குமார், 55; பண்ருட்டி கார்த்தி, 32; கடலுார் கூத்தப்பாக்கம் முனியம்மாள், 57; சின்னப்பன், 74, உட்பட 29 பேர் படுகாயமடைந்தனர்.
இதில், 24 பேர் கடலுார் அரசு மருத்துவமனையிலும், 5 பேர் புதுச்சேரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். பஸ் விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, விபத்தில் சிக்கிய இரு பஸ்களையும் கிரேன் மூலம் நகர்த்தி போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர்.
இந்த விபத்தால், கடலுார் - புதுச்சேரி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
இதுகுறித்து அரசு பஸ் கண்டக்டர் சுரேஷ்குமார் கொடுத்த புகாரில், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.