/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
/
ராகவேந்திரர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED : மே 27, 2024 05:40 AM

புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திரா சுவாமிகள் அவதார ஸ்தலத்தில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.
புவனகிரியில் மகான் ராகவேந்திரா சுவாமிகள் அவதார இல்லம், கோவிலாக நிர்மானிக்கப்பட்டு கும்பாபிேஷம் நடந்தது. இங்கு ஏக தின லட்சார்ச்சனை நிகழ்ச்சி நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம் தோத்திர பாராயணத்துடன் துவங்கியது.
தொடர்ந்து நிர்மல்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் என பல்வேறு அபிஷேகங்கள் சுவாமிக்கு செய்தனர். காலை 6:00 மணியில் இருந்து 10:00 மணிக்குள் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடந்தது. பகல் 1:10 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை விழா குழுவினர்களான நிறுவனத் தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு செய்திருந்தனர். ரமேஷ் உள்ளிட்ட ஆச்சார்யர்கள் பூஜைகளை நடத்தினர்.

