ADDED : மே 07, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் சாவடிக்குப்பத்தை சேர்ந்தவர் அருள்தாஸ், 25. செங்கல் சூளை தொழிலாளி. இவரது உறவினர்கள் செல்வக்குமார், பாஸ்கர் மூவரும், நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில், மேமாத்துார் அணைக்கட்டு சாலையில் பைக்கில் சென்றனர். பைக்கை பாஸ்கர் ஓட்டினார்.
பஸ் விபத்துக்குள்ளானதில் பின்னால் அமர்ந்திருந்த அருள்தாஸ் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி ருத்தேஸ்வரி, 23, புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.