நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம் முகமது யூசூப் மகன் அன்வர் பாஷா, 46. இவர் நேற்று காலை 9:50 மணியளவில், தனது பைக்கில் விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பூந்தோட்டம் அருகே வந்தபோது, அங்கு நின்றிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதியதில் படுகாயமடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் இறந்தார்.
விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

