/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தொகுதிக்கு ஒருவர் மனு தாக்கல்
/
கடலுார் தொகுதிக்கு ஒருவர் மனு தாக்கல்
ADDED : மார் 23, 2024 06:06 AM
கடலுார் : கடலுார் லோக் சபா தொகுதியில் போட்டியிட நேற்று சுயேட்சை ஒருவர் முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கடலுார் லோக்சபா தொகுதியில், கடலுார், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.
தொகுதிக்கான மனு தாக்கல் கடலுார் கலெக்டர் செய்யப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் முதல் நாள் மற்றும் இரண்டாம் நாட்களில் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை.
மூன்றாம் நாளான நேற்று விருத்தாசலம் அடுத்த கரிநத்தம் பகுதியை சேர்ந்த அறிவுடைநம்பி என்பவர், ஊழல் எதிர்ப்பு செயலாக்க கட்சி சார்பில் கலெக்டர் அருண் தம்புராஜிடம் முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.

