/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' வேளாண் துறை செயல் விளக்கம்
/
'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' வேளாண் துறை செயல் விளக்கம்
'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' வேளாண் துறை செயல் விளக்கம்
'ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம்' வேளாண் துறை செயல் விளக்கம்
ADDED : ஏப் 16, 2024 06:19 AM

கடலுார், : கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் வேளாண் துறை சார்பில் 'ஒரு கிராமம், ஒரு பயிர்' திட்டத்தின் கீழ் நெற்பயிர் செயல் விளக்கம் நடந்தது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை, மத்திய திட்ட துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கி, ஆய்வு செய்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் எந்த பயிர் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறதோ, அந்த பயிரை தேர்ந்தெடுக்க வேண்டும். அருகருகே, பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து குறைந்தது 5 முதல் 10 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.
ஒரே பயிரை விதைப்பு செய்து அறுவடை வரை வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்படும் என இணை இயக்குனர் ஏழுமலை கூறினார்.
வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ், வேளாண் அலுவலர்கள் ஜெயஸ்ரீ, பொன்னிவளவன் உட்பட பலர் பங்கேற்றனர்.