/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆன்லைன் லாட்டரி விற்பனை: மூவர் கைது
/
ஆன்லைன் லாட்டரி விற்பனை: மூவர் கைது
ADDED : ஆக 18, 2024 11:33 PM

புவனகிரி: புவனகிரியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
புவனகிரி பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் புவனகிரி போலீசார் மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் புவனகிரி வடக்குத்திட்டை தெற்குத்தெரு மணிகண்டன்,46; சேத்தியாத்தோப்பு அடுத்த ஓடாக்க நல்லுார் மேலத்தெரு செல்வம்,51; மற்றும் மேல்புவனகிரி வாய்க்காங்கரைதெரு பார்த்திபன்,31; ஆகியோர் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.
மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.