/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் நெரிசலை தவிர்க்க கூடுதல் பாதைகள் திறப்பு

ADDED : மார் 24, 2024 04:20 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசலை தவிர்க்க நேற்று கூடுதல் பாதைகள் திறக்கப்பட்டது.
வார விடுமுறைதினமாக நேற்று சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.
விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகனங்கள் அணிவகுக்க துவங்கியது. அதனையொட்டி, கூடுதலாக 2 பாதைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து வாகனங்கள் டோல்பிளாசாவை எளிதாக கடந்து சென்றன. போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் டோல் பிளாசா ஊழியர்கள் வாகனங்களின் போக்குவரத்தை சரி செய்து அனுப்பி வைத்தனர்.
வார நாட்களில் சராசரியாக நாள் ஒன்று 25 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்து செல்லும். நேற்று விடுமுறை தினம் என்பதால், இரவு 8 மணிவரை 35 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன.