/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் மாஸ்டர் பேக்கரி திறப்பு
/
நெல்லிக்குப்பத்தில் மாஸ்டர் பேக்கரி திறப்பு
ADDED : ஆக 31, 2024 02:52 AM

கடலுார்: நெல்லிக்குப்பத்தில் நேற்று கடலுார் செம்மண்டலம் மாஸ்டர் பேக்கரி, ஸ்வீட்ஸ் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.
நெல்லிக்குப்பம் நகரமன்ற சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். மாஸ்டர் பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை பங்குதாரர்கள் ராஜா, முகமது ஷியாத் வரவேற்றனர்.
அவர்கள் கூறுகையில், 'நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளி எதிரில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இங்கு காரம், கேக், பிரட் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று முதல் வரும் 8ம் தேதி வரை வாங்கக்கூடிய பொருட்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆர்டரின்பேரில், உடனுக்குடன் டெலிவரி வழங்கப்படும்' என்றனர்.
துணை சேர்மன் கிரிஜா திருமாறன், வர்த்தக சங்க மண்டல தலைவர் சண்முகம், நிர்வாகிகள் ராமலிங்கம், சம்சுதீன், சுரேஷ், ஆசாத், தொழிலதிபர் சத்யநாராயணன், கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் பாலாஜி, ரேணுகா டைல்ஸ் சீனிவாசன், வினோத், தேவநாதன், செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.