/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பு.முட்லுார் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
/
பு.முட்லுார் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
பு.முட்லுார் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
பு.முட்லுார் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
ADDED : ஏப் 09, 2024 05:45 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் நடுமஹல்லா பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளிவாசல் தலைவர் முகமது காசிம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அ.தி.மு.க., மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர். நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை, பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், நகர செயலாளர் செந்தில், துணைத் தலைவர் முத்தியார் அலி, பொருளாளர் முகமது ரபி, கிளை செயலாளர் முகமது அலி, முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.