/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ட்ராங் ரூம் கேமிராக்களின் செயல்பாடு: கலெக்டர் ஆய்வு
/
ஸ்ட்ராங் ரூம் கேமிராக்களின் செயல்பாடு: கலெக்டர் ஆய்வு
ஸ்ட்ராங் ரூம் கேமிராக்களின் செயல்பாடு: கலெக்டர் ஆய்வு
ஸ்ட்ராங் ரூம் கேமிராக்களின் செயல்பாடு: கலெக்டர் ஆய்வு
ADDED : மே 12, 2024 05:40 AM

கடலுார்: கடலுாரில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங்க் ரூம் சி.சி.டி.வி.,க்கள் சரியாக செயல்படுகிறதா என, கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதி ஓட்டு பெட்டிகள, கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப் பெட்டிகள் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு துணை ராணுவம் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 197 சி.சி.டி.வி.,க்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுப் பெட்டிகள் உள்ள ஸ்ட்ராங் ரூம் கேமிராக்கள் இரண்டு முறை செயல்படாமல் போனதால், அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேற்று கடலுார் கலெக்டர் அருண்தம்புராஜ் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் உள்ள ஓட்டுப் பெட்டி ஸ்ட்ராங் ரூம்களை பார்வையிட்டு, சி.சி.டி.வி.,க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.