/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புறக்காவல் நிலையம்: எஸ்.பி., திறப்பு
/
புறக்காவல் நிலையம்: எஸ்.பி., திறப்பு
ADDED : செப் 17, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா தலைமை தாங்கினார். வடலுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வரவேற்றார். இன்ஸ்பெக்டர்கள் சுதாகார், ராஜதாமரை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.பி., ராஜாராம் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி முருகன், துணைத் தலைவர் ஜோதி ராமலிங்கம், வள்ளலார் அறங்காவலர் குழு உறுப்பினர் கிஷோர், அன்பழகன், சரவணன், ஜெகதீசன், முல்லை உட்பட பலர் பங்கேற்றனர்.

