/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திடீர் மழையால் நெல் மூட்டைகள் சேதம்
/
திடீர் மழையால் நெல் மூட்டைகள் சேதம்
ADDED : மார் 02, 2025 06:43 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதமானது.
கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தில் இயங்கி வரும் நேரடி கொள்முதல் நிலையத்தில தற்போது 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மூட்டை பிடிக்காமல் நெற்கதிர்கள் குவியலாகவும் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு திடீரென பெய்த மழையால் தரையில் அடுக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தது.
அதேபோன்று, புவனகிரி சித்தேரி, கீரப்பாளையம் கண்ணங்குடி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நேற்று முன்தினம் இரவு பெய்த திடீர் மழையால் நனைந்து சேதமானது.
நனைந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் நேற்று காலை தார்பாய் கொண்டு மூடினர். இதனால் நனைந்த நெல் மூட்டைகள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.