/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு
/
கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு
ADDED : மார் 25, 2024 05:48 AM

கடலுார்: குருத்தோலை ஞாயிறு நாளான நேற்று, கடலுாரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாளை, கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கொண்டாடப்படுவது வழக்கம். ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்படும் முன்பு இருக்கும் நாட்கள் தவக்காலமாக கருதப்படுவது வழக்கம். அந்த தவக்காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைபிடிப்பது வழக்கம். அதன்படி, கடலுார் மாநகராட்சியில் உள்ள தேவாலயங்களில் நேற்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு கடைபிடித்தனர். கடலுார் பீச் ரோடு புனித கார்மேல் அன்னை தேவாலயத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியபடி முக்கிய வீதிகளில் வழியாக பாடல்களை பாடி ஊர்வலம் சென்றனர்.
இதைத்தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல் பாரதிசாலை ஆற்காடு லுாத்தரன் திருச்சபை, மஞ்சக்குப்பம் துாய எபிபெனி தேவாலயம், முதுநகர் கிறிஸ்து நாதர் தேவாலயம், சொரக்கல்பட்டு துாய யோவான் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

