ADDED : செப் 13, 2024 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: வேப்பூர் அருகே புதிய ஊராட்சி அலுவலக கட்டுமான பணியை, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்ட, ரூ.28.01 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான, பூமி பூஜை நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் ராணி முருகேசன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை துவக்கி வைத்தார். இதில், நல்லுார் பி.டி.ஓ., சண்முக சிகாமணி, பொறியாளர் சுமதி, ஊராட்சி துணைதலைவர் அய்யாவு மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

