/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
/
சம்பு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ADDED : மே 06, 2024 06:08 AM

பெண்ணாடம், : பெண்ணாடம் தாதங்குட்டையில் மண்டியுள்ள சம்பு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
பெண்ணாடம் பேரூராட்சிக்கு சொந்தமாக, சோழன் நகர் குடியிருப்பு பகுதியையொட்டி தாதங்குட்டை உள்ளது.
இந்த குட்டை பல ஆண்டுகளாக துார் வாராததால் அதிகளவில் சம்புகள் வளர்ந்து மண்டியுள்ளன. நேற்று மாலை 3:30 மணியளவில் மர்மமான முறையில் சம்பு தீப்பிடித்து எரிந்தன.
இதையறிந்த, அப்பகுதி மக்கள் குடிசை வீடுகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.
பெண்ணாடம் போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.