/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாண்டுரங்கர் கோவில் கும்பாபிேஷக விழா
/
பாண்டுரங்கர் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : மார் 29, 2024 05:41 AM

புவனகிரி: புவனகிரி ஆரிய வைஸ்ய பாண்டுரங்கர் பஜடனை மடத்தில் எழுந்தருளியுள்ள ருக்மணி தாயார், பாண்டுரங்கர், கருடஆழ்வார் மற்றும் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு கடந்த 25ம் தேதி மாலை பெருமாள் தாயார் சகஸ்ர நாம அர்ச்சனையுடன், பிரார்த்தனை நிகழ்ச்சி துவங்கியது. 26ம் தேதி காலை 10:00 மணிக்கு திருவாராதனம், கும்பமண்டல பிரம்ம அக்கினி சதுஸ்தான பூஜைகள் நடந்தது.
முதல் கால ஹோமம், சாற்று மறை, மாலை 6:00 மணிக்கு இரண்டாம் கால ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. 27ம் தேதி காலை 9:00 மணிக்கு கும்பம் மண்டல பூஜை, மூன்றாம் கால ஹோமங்கள், திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடந்தன.
நேற்று காலை ஐந்தாம் கால பூஜைகள், கடம் புறப்பாடு துவங்கி, விமானத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை ஆரிய வைசிய சங்கத் தலைவர் சுந்தரேசன், சீனுபாலாஜி உள்ளிட்ட விழா குழுவினர் முன்னிலையில் நரசிம்ம பட்டாச்சார்யார் நடத்தி வைத்தார்.

