/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள்
/
துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள்
துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள்
துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள்
ADDED : ஏப் 17, 2024 11:32 PM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
லோக்சபா பொதுத் தேர்தல் நாளை (19ம் தேதி) நடக்கிறது. கடலுார் தொகுதியில் 1,509, சிதம்பரம் தொகுதியில் 793 ஓட்டுச்சாவடி மையம் என, மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதியில் 2,302 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பதற்றமான ஓட்டுச் சாவடி மையங்கள் 187, மிகவும் பதற்றமானவை 11 என, மொத்தம் 198 ஓட்டுச் சாவடி மையங்கள் கண்டறிப்பட்டுள்ளன.
கடலுார் மாவட்டத்தில், தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,357 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். அத்துடன் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 180, மத்திய துணை ராணுவ படையினர் 450, ஆந்திர மாநில போலீசார் 150, தெலுங்கானா மாநில ஊர்காவல் படையினர் 300 மற்றும் கடலூர் ஊர்க்காவல் படை, சென்னை மாநகர போலீசார், சிறப்பு பிரிவு போலீஸ் துறை, சிறை துறை போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் என மொத்தம் 4,300 பேர் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மாவட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மிகவும் பதற்றமான ஓட்டுச் சாவடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாவட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
தேர்தல் பாதுகாப்பு ஈடுபடும் போலீசாருக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரி கலெக்டர் அருண்தம்புராஜ் பங்கேற்று தேர்தல் விதிமுறைகளை விளக்கி தேர்தல் உத்தவை வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ்.பி., ராஜாராம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

