/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு
/
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு
பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு
ADDED : ஏப் 20, 2024 05:50 AM
கடலுார: கடலுார் மாவட்டத்தில், பதற்றமான 198 ஓட்டுச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது என, மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் கூறினார்.
கடலுார், மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி கமிட்டி துவக்கப் பள்ளியில் மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் ஓட்டளித்தார். பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
கடலுார் லோக்சபா தொகுதியில் உள்ள 1,509 ஓட்டுச்சாவடி மையங்களில் காலை 7:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. ஓட்டுச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல், குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் 198 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில், 78 ஓட்டுச்சாவடி மையங்களில் துணை ராணுவத்தினர், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டத்தில், 11,600 தேர்தல் அலுவலர்கள், 4,300 போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

