/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துணை ராணுவ வீரர்கள் கொடி அணி வகுப்பு
/
துணை ராணுவ வீரர்கள் கொடி அணி வகுப்பு
ADDED : ஏப் 13, 2024 05:11 AM
நெல்லிக்குப்பம்: தேர்தலை முன்னிட்டு, நெல்லிக்குப்பத்தில் துணை ராணுவ வீரர்களின் கொடி அணி வகுப்பு நடந்தது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டு போடும் வகையில், போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
கடலுார் மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், நெல்லிக்குப்பம் நகரில் நேற்று துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
பண்ருட்டி டி.எஸ்.பி., பழனி தலைமையில், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர், பேண்ட் வாத்தியங்கள் முழங்க, அணிவகுப்பு நடத்தினர்.
குடிதாங்கி சாவடியில் இருந்து துவங்கிய அணிவகுப்பு, கீழ்பட்டாம்பாக்கம் வரையில் 2 கி.மீ., துாரம் கொடி அணிவகுப்பு நடந்தது.

