/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிள்ளை அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
/
கிள்ளை அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
கிள்ளை அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
கிள்ளை அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
ADDED : ஆக 02, 2024 10:32 PM

கிள்ளை- கிள்ளை கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் உமா தலைமை தாங்கினார். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர், பங்கேற்று பேசுகையில், மாணவர்களை இடைநிற்றல் இல்லாமல் அனுப்ப வேண்டும். மாணவர்கள் சுகாதாரமாக பள்ளிக்கு வரவேண்டும். குழந்தை திருமணம் நடக்காமல் இருக்க ஆசிரியர்கள், கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்கண்காணிக்க வேண்டும். குழந்தை திருமணம் நடந்தால், கிள்ளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்என்றார்.
கூட்டத்தில், கிராம தலைவர் பெருமாள், கவுன்சிலர் குமார், ஆசிரியர்கள் ராஜ்குமார், உமா மகேஸ்வரி, சரண் ரஞ்சினி,வித்யா நந்தினி, பரிசுத்தமேரி மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.