/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் பணியில் கட்சியினர் 'சுணக்கம்'
/
தேர்தல் பணியில் கட்சியினர் 'சுணக்கம்'
UPDATED : மார் 22, 2024 12:42 PM
ADDED : மார் 22, 2024 12:42 AM
பரங்கிப்பேட்டை : சிதம்பரம் லோக்சபா தொகுதியில், ஆளுங்கட்சி தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனும், அ.தி.மு.க., கூட்டணியில் அக்கட்சி வேட்பாளர் சந்திரகாசனும் போட்டியிடுகின்றனர். மூன்றாவது தேர்தலாக இரு கட்சிகளும் மோதுகின்றன. அதே சமயத்தில், பா.ஜ., கூட்டணியில் தொகுதி பா.ம.க., விற்கு ஒதுக்கப்படுகிறதா அல்லது பா.ஜ., கட்சியே வேட்பாளரை நிறுத்துகிறதா என்பது முடிவாகவில்லை.
சிதம்பரம் லோக்சபா தொகுதியை பொறுத்தவரை மும்முனை போட்டி உறுதியாகியுள்ளது. ஆனால், கடந்த கால தேர்தல் போன்று, தேர்தலில் கட்சியினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். தொகுதியில், சுவர் விளம்பரம், ஓட்டு சேகரிப்பு, பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடாமல் அனைத்து கட்சியினருமே ஆர்வம் காட்டாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால், சிதம்பரம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கவில்லை.

