/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் பண்ருட்டி பயணிகள் மகிழ்ச்சி
/
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் பண்ருட்டி பயணிகள் மகிழ்ச்சி
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் பண்ருட்டி பயணிகள் மகிழ்ச்சி
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் பண்ருட்டி பயணிகள் மகிழ்ச்சி
ADDED : மே 14, 2024 05:25 AM
பண்ருட்டி: சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு கோடைகால சிறப்பு ரயில் அறிவிப்பால், பண்ருட்டி ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் வரும் 17 ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் மே 17ம் தேதி முதல் வெள்ளி, ஞாயிற்று கிழமையில் புறப்படுகிறது. மே 17ம் இரவு 11:50 மணிக்கு புறப்படும் ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், பண்ருட்டிக்கு மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு வந்தடைகிறது.
அங்கிருந்து 3:23க்கு புறப்பட்டு, திருப்பாதிரிபுலியூர், கடலுார் முதுநகர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, பேராளம், திருவாரூர், நாகபட்டினம் வழியாக, காலை 8:30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் சனிக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் மதியம் 2:45 க்கு வேளாங்கண்ணியில் புறப்படும் ரயில் இரவு 7:38க்கு பண்ருட்டி வந்து சென்னை எழும்பூருக்கு இரவு 11:30 க்கு சென்றடைகிறது.
இந்த ரயில் மே 17 முதல் ஜூலை 1 வரை இயக்கப்படுகிறது.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம் மற்றும் பண்ருட்டியில் நிறுத்தப்படுவதால், பண்ருட்டி பகுதி ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

