/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் பஸ்சில் கரும்புகை வந்ததால் பயணிகள் ஓட்டம்
/
மகளிர் பஸ்சில் கரும்புகை வந்ததால் பயணிகள் ஓட்டம்
ADDED : மே 22, 2024 11:23 PM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மகளிருக்கான கட்டணமில்லா அரசு டவுன் பஸ்சில் கரும்புகை வெளியேறியதால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு நேற்று மாலை 3:30 மணியளவில், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மகளிருக்கான கட்டணமில்லாத அரசு டவுன் பஸ் (பிங்க் நிற பஸ்) புறப்பட்டது. மாலை 4:20 மணியளவில்,
விருத்தாசலம் வயலுார் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, பஸ்சின் முன்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.
உடனே சுதாரித்த பஸ் டிரைவர், புதுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பயணிகள் அலறியடித்தபடி பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.
தகவலறிந்த விருத்தாசலம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வந்து, பஸ்சை பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.
மகளிருக்கான கட்டணமில்லாத பஸ் என்பதால், பழுதான பஸ்சை இயக்குவதா என பெண்கள் புலம்பிச் சென்றனர். ஓடும் பஸ்சில் கரும்புகை வெளியேறிய சம்பவம், அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

