/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அவதி
/
வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அவதி
வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அவதி
வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அவதி
ADDED : மே 27, 2024 05:47 AM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலை, மந்தாரக்குப்பம் கடைவீதியில் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் நின்று பயணிகளை ஏற்றி, இறங்கிவிட்டு செல்லும்.
பஸ் நிறுத்தம் அருகே உள்ள வங்கிகள், ேஹாட்டல்கள் மற்றும் கடைகளுக்கு வருவோர் தங்களது டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பயணிகளை இறங்கிவிட பஸ்களை நிறுத்த முடிவதில்லை. சற்று துாரம் சென்று தான் பயணிகளை இறங்கி விடவேண்டிய நிலை உள்ளது.
இதனால் பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் முதியோர், சிறுவர், பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பஸ் ஏறமுடியாமல் கடும் அவதியடைகின்றனர்.
எனவே, பஸ் நிறுத்தத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

