/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு
/
பாடலி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு
ADDED : மார் 03, 2025 07:41 AM

கடலுார் : கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் பாடலி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
மண்டல தலைவர் உமா சங்கர் தலைமை தாங்கினார். செயலாண்மை குழு உறுப்பினர் பாடலி சங்கர் வரவேற்றார்.
மாவட்ட ஆளுனர் சுபாஷ் சந்திரபோஸ் துவக்கி வைத்து பேசினார். உடனடி முன்னாள் பன்னாட்டு இயக்குனர் மதனகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷிற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஸ்ரீவள்ளி விலாஸ் சீனிவாசன், ரமேஷ், வி ஸ்கொயர் மால் இயக்குனர் சரவணன், சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் சுபத்ரா ஆனந்தராஜ், செயலாண்மை குழு பொருளாளர் சின்னதுரை, இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாண்மை குழு உறுப்பினர் சின்னமணி நன்றி கூறினார்.